Thursday, May 17, 2012

63 இலங்கையருடன் அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு அகதிப் படகு!

Thursday, May 17, 2012
அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு 63 இலங்கை அகதிகளுடன் சென்ற படகொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேர்த் நகரில் இருந்து 2750 கிலோ மீற்றர் தொலைவில் கொக்கோஸ் தீவு அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத இந்தத் தீவிலேயே அகதிகள் படகு தரையைத் தொட்டுள்ளது. அகதிகளை ஏற்றிச் சென் றபடகொன்று இவ்வருடத்தில் கரையைத் தட்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தப் படகில் இருந்த அனைவரும் ஆண்கள். இவர்கள் அகதிகள் முகாம் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தில் மாத்திரம் 88 படகுகளில் வந்த 2,946 பேர் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் அவுஸ்திரேலியா வந்துள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment