Tuesday, ,May, ,15, 2012புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட கனடியரான ரமணன்
மயில்வாகனம் மற்றும் அமெரிக்கரான கருணாகரன் கந்தசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை அமெரிக்க நீதித்துறை குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்காவின் நேற லுழசம நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் ரமணன் மயில்வாகனம் திங்கட்கிழமையும் கருணாகரன் கந்தசாமி கடந்த வெள்ளிக்கிழமையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கனடா மற்றும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ரமணன் மயில்வாகனம் மற்றும் கருணாகரன் கந்தசாமி ஆகியோருக்கு முறையே 15 மற்றும் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும் என அமெரிக்காவின் நீதித்துறை கோரியிருந்தது.
இவர்களில் கருணாகரன் கந்தசாமி அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பிற்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டினால் மேலதிக கால சிறைத்தண்டனையை எதிர்நோக்கியிருந்தார். இருந்தபோதிலும் தமது குற்றத்தை
ஏற்றுக்கொண்டு மனந்திருந்தியுள்ள தமது தரப்பு வாதிகளை விடுதலை செய்யுமாறு ரமணன் மயில்வாகனம் மற்றும் கருணாகரன் கந்தசாமி ஆகியோரின் வழங்கறிஞர்கள் தமதுவாதங்களை தனித்தனியே முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும்ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தை அவர்களின் தண்டனையாக கருதி விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட கனடியரான ரமணன் மயில்வாகனம் மீண்டும் கனடா வருவதற்கு சட்டச்சிக்கல்களை எதிர்கொள்வாரா என்பது குறித்து தெளிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஒரு அமெரிக்கர் மற்றும் ஜந்து கனடியத் தமிழர்கள் அமெரிக்க மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு விசாரணையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment