Tuesday, May 15, 2012

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு!

Tuesday, ,May, ,15, 2012
இலங்கை::புலி பயங்கரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான, 146 பௌத்த பக்தர்களை அவர்களது புனித் தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி விகாரையில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்தின் 27 ஆவது ஆண்டுநிறைவு இன்றாகும்.

1985 ஆம் ஆண்டு மே 14 அம் திகதி நிகழ்ந்த இக் கொடூர சம்பவமானது, முழு நாட்டையும், முழு உலகத்தாரையும் திகைக்கவைத்த ஒரு சம்பவமாகும். சிறுவர்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் என பாரபட்சம் பாராமல் இப் பயங்கரவாதிகள் அனைவரையும் கொண்றுகுவித்தனர். பின்னர் இச் சம்பவமானது புலிபயங்கரவாத அமைப்பின் தலைவரான பிரபாகரனின் தந்திர உத்தியாகும் என்பது தெரியவந்தது. ஏனெனில் இதன் மூலம் அப்பாவி தமிழ் மக்கள் மீது இனவாத வெறுப்பை ஏற்படுத்தி இனக் கலவரத்தை தூண்டுவதே பிரபாகரனின் பின்னணி நோக்காக இருந்தது.

புலிபயங்கரவாதிகள் இதன் போது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதில் 85க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமும் அமைந்தனர்.

புனித தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மஹா போதி விகாரை ஆகிய பௌத்தர்களின் மிக முக்கிய புனித்தளங்களில் ஒன்றாகும்.

No comments:

Post a Comment