Friday, ,May, ,25, 2012இலங்கை::ஜனாதிபதியினால் சரத்து பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில், அவருக்கு தேர்தலில் நிற்கும் உரிமை மாத்திரமே வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இந்த உரிமையை வழங்க முடியாது போனதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பொன்சேகாவின் பின்னால் மக்கள் அலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் அவதானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சரத் பொன்சேகாவின் விளக்கில், ஏனைய சிலர் வெளிச்சத்தை அனுபவித்து வருவதாகவும் அவர் குற்பபிட்டுள்ளார்.
No comments:
Post a Comment