Friday, ,May, ,25, 2012இலங்கை::போர் குற்றவாளியான நாடு கடந்த புலிகளின் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரனுக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த பல போர் குற்றங்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு இருப்பதற்கான பல சாட்சியங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகவும் இந்த சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளஅமெரிக்கா இதுவரை முன்வரவில்லை எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்த காலத்தில் 5 முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ருத்ரகுமாரன் வன்னிக்கு சென்று, புலிகளின் தலைவருடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாக பல தகவல்கள் வெளியாகின. அத்துடன் புலிகளின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரனே பணியாற்றி வந்தார் என்றும் திவயின கூறியுள்ளது.
No comments:
Post a Comment