Thursday, May 17, 2012

ஐரோப்பிய ஒன்றியத்தி​னூடாக வாங்கப்பட்ட உழவு இயந்திரங்க​ளை வழங்​கும் நிகழ்வு!

Thursday, May 17, 2012
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவுசெய்யப்பட்ட மூன்று மஹெந்திரா உழவு இயந்திரங்களை UNOFS நிறுவனம் திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டுக்கென கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச சபை ஆகியவற்றிற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு 16.05.2012ல் அம்பாறை UNOFS திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ்மீராசாஹிப், கரைதீவு பிரதேச சபை தவிசாளர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர்ஆகியோரிடம் UNOFS நிறுவனத்தின் பணிப்பாளர் பிரான்ஸ்கொயிஸ் ஜெகொப் உழவு இயந்திரங்களை கையளித்தார்.

இதன்போது UNOFS நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் செலியா மாகர், UNOFS நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment