Friday, May 25, 2012

சீன நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையடித்த குழு கொழும்பில் கைது!

Friday, ,May, ,25, ,2012
இலங்கை::சர்வதேச காவற்துறையின் கிளையின் அறிப்பினை அடுத்து..பல காலமாக சீனாவில் பல்வேறு நிதி நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் இருந்து பலவந்தமாக பணத்தை பெற்று வந்த குழுவொன்று கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் கைதுசெய்யட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். 6 சீன பெண்கள், 11 ஆண்கள் உள்ளிட்ட 17 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள சர்வதேச காவற்துறையின் கிளையின் அறிப்பினை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த சீன காவற்துறை குழுவொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளது. இவர்கள் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நடத்திய விசாரணைகளை அடுத்து, இந்த 17 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு அனுப்பிவைக்கபட்டனர்,

No comments:

Post a Comment