Wednesday, May 16, 2012

சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் டிரான் அலஸ் கலந்துரையாடல்!

Wednesday,May, 16, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், ஜனாதிபதியை சந்தித்து இன்று காலை கலந்துரையாடியதாக நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படுவதில் காணப்படும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக தெரிவித்த அவர், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட்டதன் பின்னர் விரைவில் அவரை விடுதலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment