Wednesday,May, 16, 2012லண்டன்::பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளைவுகள் அற்றது என்று பல்வேறு பெருமைகளை கொண்டது சாண்ட்விச். இங்கிலாந்தில் வசித்த மோன்ட்டகு என்ற பணக்காரர் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டலில் அடிக்கடி சீட்டு விளையாடுவார்.
அப்போது, இரண்டு பிரட் ஸ்லைஸ்களுக்கு இடையே சமைத்த இறைச்சியை வைத்து சாப்பிடுவார். ஓட்டலில் இப்படிப்பட்ட உணவை சப்ளை செய்யும் போது விளக்கமாக கூறி வந்தனர். ஒரு நாள் திடீரென Ôசாண்ட்விச்Õ கொண்டு வா என்று நண்பர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு, 2 பிரட் ஸ்லைஸ்களுக்கு இடையில் எந்த உணவு பொருளை வைத்தாலும் ‘சாண்ட்விச்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். சாண்ட்விச்சுக்கு இப்படி பெயர் வைக்கப்பட்டது 1762,ம் ஆண்டு. இதையடுத்து உள்ளூர், வெளியூர் என மெல்ல மெல்ல பரவி உலகளவில் பிரபலமாகி விட்டது சாண்ட்விச். இதற்கு சூப்பர் பெயர் வைத்த மோன்ட்டகு குடும்பத்தாரின் 11,வது பரம்பரையை சேர்ந்த ஜான் மோன்ட்டகு, சாண்ட்விச்சுக்கு தன் மனமார்ந்த 250,வது பிறந்த நாள் வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவ்வாறு சாண்ட்விச் அசோசியேஷன் அதிகாரி மான்டி கூறினார். 250,வது பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் சிறப்பு விருந்து நிகழ்ச்சிகள், விதவிதமாக சாண்ட்விச் தயாரிக்கும் போட்டிகள் தூள்பறக்கின்றன.
No comments:
Post a Comment