Saturday, May, 19, 2012இலங்கை::கண்டி - குளுகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இராணுவச் சிப்பாய், அங்கிருந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தாயும், மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சிப்பாயை பிடித்து கடுமையாக தாக்கியதால், சிப்பாய் காயமடைந்துள்ளதாகவும் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment