Wednesday,May, 16, 2012இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாணவர்கள் மத்தியில் சிப்பாய் படையணிகளை ஊக்குவிக்க வேண்டும். பௌதீக அபிவிருத்திகள் மாத்திரம் நாட்டின் தரத்தை ஒரு பொழுதும் உயர்த்தப் போவதில்லை.
சிறந்த ஆளுமையுடைய தலைவர்களை உருவாக்க வேண்டும். இதன் போது இன, மொழி வேறுபாடுகளை மறந்து திறமைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று றண்டெம்பையில் அமைந்துள்ள தேசிய மாணவர் சிப்பாய் படையணி பயிற்சி முகாமில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்க்ஷ பா.உ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,
ஆசியாவில் சிறந்த நாடாக இலங்கையை கொண்டுசெல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.இதற்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோ பொருளாதாரத்தில் முன்னோக்கி செல்வதோ போதுமானதல்ல.
இதற்காக சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். அதற்காக இன்றிலிருந்தே இளைஞர் அணிகளை தயார் படுத்த வேண்டும். பிரதேச, இன, மொழி, மற்றும் மத வாதங்களை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது செயற்படவேண்டும்.
இலங்கையின் ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். கல்விக் கொள்கைகளில் புதிய திருத்தங்களை ஏற்படுத்தி சவால் மிக்க எதிர்காலத்தை எதிர்கொள்ளக் கூடியதாக நாட்டின் மாணவ சமூகத்தை வளர்த்திட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment