Wednesday, May 16, 2012

இலங்கைப் பெண்ணுக்கு துபாயில் சிறைத்தண்டனை!

Wednesday,May, 16, 2012
இலங்கை::துபாய் நீதிமன்றத்தினால் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் பணியாற்றிய வீட்டில் பணம் மற்றும் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பணியாற்றச் சென்ற முதல் நாள் மூன்று இலட்சத்து நாற்பது ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான நகை மற்றும் எட்டாயிரம் திர்ஹாம் பெறுமதியான பணத்தை திருடியதாக இந்தப் பணிப்பெண்ணுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த பெண் மற்றும் குழந்தையை நினைவிழக்கச் செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

31 வயதான இலங்கை பணிப்பெண் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் சிறைத்தண்டனை நிறைவடைந்ததன் பின்னர் அவர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment