Wednesday,May, 16, 2012இலங்கை::வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கொன்றின் ஆவணம் தொடர்பில் நம்பிக்கையை மீறும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவொன்றினால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment