Saturday, May 26, 2012

சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு, ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி - கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, ,May, ,26, 2012
இலங்கை::ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை யாகிய சரத் பொன்சேகா வடபகுதி யின் சிவில் நிர்வாகத்தில் இராணு வத்தினர் தலையிடுவதாக தமிழ் பத்திரிகையொன்றுக்கு கூறியிருக்கும் கருத்து வெளிநாடுகளின் தலையீடு களை அவர் வலியுறுத்துவதை காட்டு வதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒரு விபத்தினால் காயம் அடைந்த பின்னர் அங்கு 4 மாத காலம் சிகிச்சை பெற்று இப்போது குணமாகி இருக்கும் வெகுஜன ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் செய்தி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

சரத் பொன்சேகா பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி அவர்கள் அளித்த மன்னிப்பின் மூலம் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா தன்னுடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து விட்டு, ஜனாதிபதி அவர்கள் அளித்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு சரத் பொன்சேகா வெளிநாட்டில் உள்ளவர்களை தலையிடுமாறு அழைத்தது தவறான செயல் என்றும் இப்போது அவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பாவையாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் எம்மத்தியில் எழுந்துள்ளது என்றும் கூறினார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும், ராஜதந்திர மட்டத்தில் இவ்விதம் தோல்விகள், வெற்றிகள் மாறி மாறி வரும் என்றும் சொன்னார்.

ஜெனீவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ‘நான் அதற்கு ஏற்புடைய ஒரு நல்ல முடிவை எடுப்பேன்’ என்று தெரிவித்திருக்கும் கருத்தை அமைச்சர வையில் உள்ள சகல அங்கத்தவர்களும் இந் நாட்டு மக்களும் நம்புகின்றார்கள்.

ஜனாதிபதி அவர்கள் செய்த சாதனையை நாம் மறக்க முடியாது. ஒரு தடவையல்ல. இரண்டு தடவையல்ல, மூன்று தடவை ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றிய மாவீரர் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கருணையினால் இன்று சுதந்திரம் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்து பற்றி தான் அபிப்பிராயம் தெரிவிப்பதாயின், இலங்கையில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. எவருக்கும் எதையும் பொறுப்பற்ற முறையில் சொல்லலாம்.

ஆனால் இன்று சாதாரண மனிதனாக இருக்கும் சரத் பொன்சேகா சொல்வதை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் திரு. கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக வியலாளர்களுக்கு கூறினார்.

சரத் பொன்சேகா இந்த தமிழ் தினசரிக்கு அளித்த பேட்டியில், வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு இருப்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்குள்ள படை முகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

சந்தேகத்தின் பெயரில் கைதான இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேற்றத்தை எப்படி முடிப்பது என்பது பற்றியும் எந்தெந்த இடங்களில் படை முகாம் களை அகற்ற வேண்டும் என்பது பற்றியும் தமிழ் மக்களை எவ்வித தொல்லைகளும் இன்றி எப்படி குடியேற்றுவது என்பது தொடர்பிலும் திட்டங்களை வகுத்திருந் தேன்.

அந்தத் திட்டங்களை அவர்கள் அப்போது வெறுத்தனர். ஆனால் 2012ல் அதாவது இன்று வரையில் இவர்களால் ஒன்றுகூட செய்ய முடியாமல் போயுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இராணுவ முகாம்களால் மக்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உண்மையில் அது பிரச்சினைதான். அதேபோல் கிட்டத்தட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வளித்திருக்கிறோம்.

அவர்கள் சரியான புனர்வாழ்வளிக் கப்பட்டார்களா? அவர்கள் மன உளைச்சலைக்கு ஆளாகியுள்ளார்களா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்த பின்னர் இராணுவ முகாம்களை படிப்படியாக அகற்றலாம். வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு இருப்பதை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் இருக்கக்கூடாது.

அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலைகளை மாத்திரம் தான் செய்ய வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில் இராணு வத்தை இவர்கள் சிவில் நிர்வாகத்தில் இருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதி காரிகள் கூட தகுதிவாய்ந்தவர்கள் அல்ல. அரசியல் அடிவருடிகளைத்தான் இவர்கள் நியமித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைப் பாருங்கள் இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என்று இந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment