Saturday, May 19, 2012

இலங்கை இராணுவம் அடைந்த வெற்றியானது இதுவரையில் எந்த வொரு நாடும் சாதிக்க முடியாத ஒரு பெரும் சாதனை - ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல!

Saturday, May, 19, 2012
இலங்கை::30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் வெற்றிகரமாக முடிவ டைந்து மூன்றாண்டு பூர்த்தி யாகும் இராணுவ வெற்றி இந்நாட்டு மக்களுக்கு கிடை த்திருக்கும் மாபெரும் வெற்றி என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இரா ணுவம் அடைந்த வெற்றி யானது இதுவரையில் எந்த வொரு நாடும் சாதிக்க முடியாத ஒரு பெரும் சாதனை என்று சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் நீண்ட காலமாக தமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்று பயங்கரவாத அமைப் பொன்றை எங்கள் நாட்டின் தன்னிகரற்ற தலைவர் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ வின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் எமது படைகள் பயங்கரவாதிகளை துவம் சம் செய்த வெற்றி உலக வரலாற்றிலேயே புதியதோர் அத்தியாயமாக அமைந்துள்ளது.

2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இலங்கையில் வன்முறையும், அராஜகமும் தலைத்தோக்கி யிருந்தது. இதனால் உலக நாடுகள் இலங் கையை பயங்கரவாதிகளின் தேசம் என்று கூட ஓரம் கட்டின. சர்வதேச சமூகமும் இலங்கையை வெறுத்தது.

நாடெங்கிலும் மரணபீதியுடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இக்கால கட்டத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு பாராளு மன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்ததை அடுத்து, பயங்கரவாதம் துவம் சம் செய்யப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார். சரியான சிறந்த அரசியல் தலை மைத்துவமும் இராணு வத்தினர் கடமை க்கு அப்பால் சென்று அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுமே பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு எங்கள் நாட்டில் மீண்டும் அமை தியை ஏற்படுத்தி நாட்டில் ஐக்கியத்தை வலுப்படுத்த முடிந்தது என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment