Wednesday,May, 23, 2012இலங்கை::தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலைஇ வவுனியாஇ களுத்துறைஇ சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று ஏழாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 192 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பத்துப்பேரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் இருவரது உடல்நிலையும் வவுனியா சிறைச்சாலையில் நால்வரின் உடல் நிலையும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சிறைச்சாலைகளில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் 180 தமிழ் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் 80 கைதிகளும் பூசா தடுப்பு முகாமில் 10 கைதிகளும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் 32 கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17 ஆம்திகதி முதலும் களுத்துறை மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் 18 ஆம் திகதி முதலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகளின் உண்ணாவிரதப் ளூபாராட்டம் தொடரும் நிலையில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சில் நேற்று உயர் மட்டக் கூட்டம் இடம் பெற்றிருந்தது. கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் நேற்று மாலை வரை தமிழ் அரசியல் கைதி களுக்கு அறிவிக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment