Sunday, ,May, 27, 2012இலங்கை::கண்டி பல்லேகலையிலுள்ள இராணுவ மைதானத்தில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டபோது அருகிலுள்ள மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று வீடுகளினதும் கூரைத் தகடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீடொன்றின் தகரக் கூரை முற்றாக தூக்கியெறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விமானப்படையின் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் அன்ரூ விஜேசூரிய கூறினார்.
No comments:
Post a Comment