




Tuesday, ,May, ,15, 2012இலங்கை::புலிப் பயங்கரவாத அமைப்பை நாட்டில் இருந்து முற்றாக அகற்ற முன்னெடுக்கப்பட்ட போரின் நிகழ்வுகள் தொடர்பாக ஊடகவியலாளர் சீ.ஏ. சந்திரபிரேமவால் எழுதப்பட்ட “கோடாஸ் வோர்” என்ற நூல் நேற்று (மே-14) பத்தரமுல்லை வோட்டஸ் ஏஜில் வைத்து வெளியிடப்பட்டது.
ஜனரல் ரஞ்ஜன் விஜயரத்தின மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டதுடன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கௌரவ அதிதியாக கலந்துக்கொண்டார்.
துருக்கி நாட்டுக்கான இலங்கை தூதுவர் திருமதி.பாரதி விஜயரத்தினவால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கவால் இந் நூலைப்பற்றி அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இல்லாதுவிடின் பயங்கரவாதிகளுக்கெதிரான போரை ஆரம்பிக்க முடியாது போயிருக்குமென்றும், பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ இல்லாதுவிடின் போரில் வெற்றி கண்ட்டிருக்கமுடியாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
இந் நூலின் முதற்பிரதி ஜனாதிபதிக்கு நூலாசிரியர் சீ.ஏ.சந்திரபிரேமவால் கையளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் சரத் அமுனுகம, உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரைக்காலமும் இவ்வாறாதொரு பாரிய மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் முற்றாக பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டவில்லை. இவ்யுத்த வெற்றிக்கு காரணம் பாதுகாப்புச் செயலாளரே ஆவார் எனவும், ஜனாதிபதி அவர்கள் இவ் யுத்த வெற்றியை மேற்கொள்ள சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் நன்றியுரையானது நூலாசிரியர் திரு.சீ,ஏ.சந்திரபிரேமவால் வழங்கப்பட்டதுடன் இதில் மதகுருக்கள், முதற்பெண்மணி திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திருமதி.அயோமா ராஜபக்ஷ, வெளிநாட்டு ராஜதந்திரிகள், மாகாண ஆளுநர்கள், முப்படைத்தளபதிகள், பொலிஸ்மா அதிபர், செயலாளர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment