Tuesday, May 15, 2012

சாதனை பட்டியலில் நல திட்டங்கள்!!

Tuesday, ,May, ,15, 2012
சென்னை::அதிமுக அரசு பொறுப்பு ஏற்று ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

* ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம்

* 20 கிலோ இலவச அரிசி

* வறுமை கோட்டிற்குள் உள்ளவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள்

* புதிய மருத்துவ காப்பீடு திட்டம்

* உழவர் பாதுகாப்பு திட்டம்

* இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்

* தேர்வில் மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு வழங்கும் முறை

* பழனி ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், 106 கோயில்களில் அன்னதான திட்டம்

* முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு சிலை மற்றும் மணிமண்டபம்

* சென்னையில் மோனோ ரயில்

* ஓய்வு பெற்ற போலீசாருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்

* தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்

* பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

* தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணம் செலுத்தும்

* வனப் பகுதியை அதிகரிக்க புதிய மரங்களை நட மரக் குழுமம் அமைப்பு

* வனப் பகுதியில் மழை நீர் சேமிக்க ரூ.250 கோடி மதிப்பீட்டில் நீர் சேகரிப்பு பணிகள்

* 1006 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, 1068 திருக்கோயில் குளங்கள் புனரமைப்பு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக 45 திருக்கோயில்களில் நவீன கழிப்பிட வசதிகள்.

* ரூ.5,700 கோடியில் சென்னை புறநகர் பகுதியில் 5 தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது.

* சுகாதாரமான கிராமங்களை உருவாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது, ஒரு வீட்டிற்கு தனி நபர் கழிவறை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.2200ம், மாநில அரசு ரூ.1000ம் பயனாளியின் பங்காக ரூ.300ம் என ரூ.3500 செலவில் கழிவறை அமைக்கப்பட்டு வந்தது. இந்த தொகை போதுமானதாக இல்லை என்று கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, மாநில அரசின் பங்கு ரூ.2500 ஆகவும், மத்திய அரசின் பங்கு ரூ.2200, பயனாளியின் பங்கு ரூ.300 என ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுகாதாரமான கிராமங்கள் உருவாகும் நோக்கம் நிறைவேறும்.

* அனைத்து தரப்பு மக்களுக்கும் குடியிருப்பு கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூர் நெடுஞ்சாலையில் திருமழிசை அருகே, திருமழிசை துணைக் கோள் நகரம் அமைக்கப்படவுள்ளது. இந்த நகரம் சுமார் 311 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த துணை நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.

No comments:

Post a Comment