Tuesday, May 15, 2012

கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவை கட்சியிலிருந்து வெளியேற்றுவது குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!

Tuesday, ,May, ,15, 2012
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவை, அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கொழும்பு மாவட்ட நீதவான் தம்மிக்க கனேபொல ஜூலை மாதம் 16 ஆம் திகதிக்கு பிற்போட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அதன் பின்னர் கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாம் அறிந்துகொண்டதாகவும், பியசேன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதனை தடுப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கேரிக்கை விடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தக் கோரிக்கையின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கூட்டமைப்பிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது.

அதனை நிரந்தர உத்தரவாக மாற்றுவதா? இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கும் பொருட்டு இருதரப்பு வாதங்களையும் சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றம் ஜூலை மாதம் 16 ஆம் திகதிக்கு விசாரணையை பிற்போட்டுள்ளது.

No comments:

Post a Comment