Sunday, May 20, 2012

துக்ளக் ஆசிரியர் சோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - ஜெ நலம் விசாரிப்பு!

Sunday, May, 20, 2012
சென்னை::துக்ளக் ஆசிரியர் சோ எஸ் ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோவில் தங்கி சிகிச்சைப் பெற்றார். உடல்நிலை தேறியதும், நேராக பத்திரிகை அலுவலகம் போய் பணிகளைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலம் குன்றியது. அவர் மீண்டும் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோவின் நலன் குறித்து போனில் விசாரித்த முதல்வர் ஜெயலலிதா, நேரில் பார்க்க வரவிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் மருத்துவமனையில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சோ அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment