Sunday, May, 20, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றில் சவால் விடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக வழக்குத் n;தாடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினால் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பரிந்துரைகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமது கட்சி வடக்கில் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தமது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பில் நீதிமன்றில் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் சில சாட்சியங்கள் தொடர்பான மொழிபெயர்ப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment