Wednesday,May, 23, 2012இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளை பிழையாக வழிநடத்தி வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சக்திகளின் பிழையான வழிநடத்தல் காரணமாகவே வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பிழையாக வழிநடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியன கூட்டாக இணைந்து கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சவார்த்தைகளை அடுத்து கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment