Saturday, May, 19, 2012யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் சுயாதீனமான விசாரணைகளுக்கு எவ்வித அவசியமும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு யுத்தம் தொடர்பான விடயங்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி படையினர் கடமையாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சரணடைந்த 11000 புலி போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து, மீள சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கவாதிகளின் துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300,000 மக்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை நிலைமைகளை கண்காணிக்கு இடமில்லை எனவும், எவரும் இலங்கைக்கு செல்ல தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment