Saturday, May, 19, 2012இலங்கை::யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 10 மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது கம்பஹாவைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான சந்தேகநபர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டாம் திகதி வெசாக் பந்தல்களை பார்வையிடுவதற்காக காலி முகத்திடலுக்கு வந்திருந்த போது குறித்த மாணவர்களால் யுவதியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கோட்டை பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தோற்றவுள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் அஜரான சட்டத்தரணி கோரியிருந்தார்.
அந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான் குறித்த மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment