Monday, May 21, 2012

சரத் பொன்சேகாவின் விடுதலையையொட்டி வெலிக்கடை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Monday, May, 21, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை முன்னிட்டு சிறைச்சாலை அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டாருக்கு புறப்படுவதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்திட்டு தலைமை அதிகாரி காமினி செனரத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். கையெழுத்திடப்பட்ட இப்பத்திரம் இன்று திங்கிட்கிழமை நீதி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான இடம், திகதி, நேரம் ஆகியவை சிறைச்சாலை அதிகாரிகளினால் அறிவிக்கப்படவில்லை என சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறினார்.

அது இன்று கூடவாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நீதி அமைச்சுக்கு முதலில் கடிதம் அனுப்பிவைக்கப்பட வேண்டும். பின்னர் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக சிறைச்சாலை திணைக்களத்திற்கு அக்கடிதம் அனுப்பிவைக்கப்படும்' என அவர் கூறினார்.

இவை எல்லாவற்றிற்கும் முதல், சரத் பொன்சேகா சிகிச்சை பெறும் வைத்தியசாலையிலிருந்து அவர் எப்போது வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்பதை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்.

இன்றையதினம் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக முன்னாள் இராணுவத் தளபதியின் பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதினால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புக்கு மத்தியில் சரத் பொன்சேகா விடுவிக்கப்படவுள்ள நிலையில், சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் மிகவும் அவதானத்துடன் கண்காணிக்கப்படுவார்கள்.

சிறைச்சாலை அதிகாரிகள் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்த அறிவை கைதிகள் பயன்படுத்துவார்கள். நாங்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்' என அவர் கூறினார்.

இப்பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் எனவும் அந்த அதிகாரி கூறினார்...

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்ட ஆவனம் இன்றைய தினம் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர வெளியிட்டுள்ளார்.

குறித்த ஆவனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிகிழமை கைச்சாத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் கட்டார் விஜயத்திற்கு முன்னர் இந்த ஆவணத்தை ஜனாதிபதி செயற்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கிடையில் தற்போது நவலோக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற சரத் பொன்சேகா, இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் சரத்பொன்சேகாவுக்கு இன்றைய விடுதலை கிடைக்கும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவத்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சரத்பொன்சேகாவின் சட்டத்தரணிகளால் நீதிமன்றில் கருத்துக்களும், விளங்கங்களும், அளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கான விடுதலை வழங்கப்படும் என பதில் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாத்தறை கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார...

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் சிகிச்சைகள் நிறைவுபெற்ற நிலையில் அங்கிருந்து வெளியேறவுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் சரத் பொன்சேகா வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment