Friday, May 18, 2012

பொன்சேகாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

Friday, ,May, ,18, 2012
இலங்கை::இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதற்கமைய 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளுடன் இருவர் அவரை விடுவிக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்..

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை அனுமதி ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.

அநேகமாக நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வின் போது சரத் பொன்சேகா விடுவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், சரத் பொன்சேகா தற்சமயத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதற்கிடையில் சரத் பொன்சேகாவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

No comments:

Post a Comment