Friday, May 18, 2012

4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வெயில் 109 டிகிரியைத் தொட்டது!

Friday, ,May, ,18, 2012
சென்னை::சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 109 டிகிரி பதிவாகியுள்ளது.

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரியும் நேற்று பதிவாகி இருந்தது.

வழக்கமாக ஏப்ரலில்தான் அதிக வெயில் இருக்கும். ஆனால் மே மாதத்தில் வெயிலின் அளவு அதிகரித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரையில் 1951 முதல் 1980-ம் ஆண்டு வரை 98டிகிரி என்பதுதான் சராசரியாக இருந்து வந்தது.

1981 முதல் 2010 வரை இது 100 டிகிரியாக மாறியது. 2003-ல் உச்சகட்டமாக 113 டிகிரி வெயில் இருந்தது. 2008-ம் ஆண்டு 109 டிகிரி பதிவாகி இருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் நேற்றுதான் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது.

இதர மாவட்டங்கள்லும் கூட வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி உள்ளது. மொத்தம் 8 மாவட்டங்கள் 100 டிகிரி வெயிலில் தகித்துக் கொண்டிருக்கின்றன.

கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 28 வரை இருக்கிறது. இதனால் வெயிலின் அளவு கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

No comments:

Post a Comment