Thursday, May 17, 2012இலங்கை::புலிகளின் சட்ட வகுப்பாளராக கடமையாற்றிய நபருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலிகளின் முன்னாள் சட்ட வகுப்பாளரான கே.பி. லங்கேஸ்வரன் என்பவருக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். லங்கேஸ்வரன் புலிகளின் சட்டத்தரணியாகவும், நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு ஏப்ரல் வரையில் புலிகளின் சட்ட வகுப்பாளராக லங்கேஸ்வரன் கடமையாற்றியுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகக் கொண்ட லங்கேஸ்வரனை புலிகள் பலவந்தமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்ற சந்தர்ப்பத்தில் லங்கேஸ்வரன் இவ்வாறு புலிகள் பலவந்தமாக இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment