Sunday, May 20, 2012

மாநில உளவு துறை 9 துணை செயலகங்களை அமைக்க சி.ஐ.டி. தலைவர் ஒப்புதல்!

Sunday, May, 20, 2012
ஹைதராபாத்::மாநில உளவு துறை அமைப்பின் கூட்டம் கடந்த இரு தினங்களாக ஹைதராபாத்தில் நடைற்று வந்தது. இதில் தென் மற்றும் பக்கத்து மாநிலங்களில் சி.ஐ.டி.யின் துணை செயலகங்களை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் குற்றவாளிகளை பரிமாறிக்கொள்வதற்கும், திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களை தடுக்கும் வகையில் உளவுதுறையின் தகவல்களை உடனக்குடன் பகிர்ந்து கொண்டு தக்க தருணத்தில் நடவடிக்கை எடுக்கும் விதமாக இத் துணை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், புனே, கட்டாக், புதுச்சேரி, கோவா, ராய்பூர், மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துணை உளவு துறை மையங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக சி.ஐ.டி. தலைவர் ரமண மூர்த்தி கூறினார்.

No comments:

Post a Comment