Saturday, May 19, 2012

29 பேர் படுகொலை சம்பவம்; விசாரணை ஆகஸ்ட் மாதம்!

Saturday, May, 19, 2012
இலங்கை::மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் மாதம் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், வடமத்திய மாகாணத்திற்கான மேல் நீதிமன்ற நீதிபதி சுசன்த குமார ரத்நாயக்க இந்தத் தீர்மானத்தினை எடுத்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு சட்ட உதவியினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையின் காரணமாக வழக்கு தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதனால் முறைப்பாட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த வழக்கினை ஆகஸ்ட் மாதம் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரணை செய்யுமாறும் அதற்குத் தேவையான சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி பிரதிவாதிகளுக்கு மீண்டும் அறிவித்தார்.

No comments:

Post a Comment