Friday, April 20, 2012

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் முழுமையான நிர்வாகம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் - இந்தியக் குழுவிடம் TNA கோரிக்கை!:-13ஆவது அரசியல்-சுதர்ஷன!

Friday, April, 20, 2012
இலங்கை::வடக்கில் இருக்கும் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, மாகாணங்களுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளது.

அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வடக்கு-கிழக்கு மாகாணங்களின் முழுமையான நிர்வாகம் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரம் பரவலாக்கப்படும் போது, உரிய அதிகாரங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பகட வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பிரதேசங்களில் சீரற்ற நிலைமை காணப்படுவதாக கூறியுள்ளார். முக்கியமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்துள்ள இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனிகா தாகூர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கோரிக்கைகள் தொடர்பான தீர்வுகளை ஐக்கிய இலங்கைக்குள்ளேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாட்டை இநதியா மதிப்பதாக சுஸ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - சுதர்ஷன நாச்சியப்பன்!

13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பன் தெரிவிக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

புனரமைப்பு செய்யப்பட்ட கரையோர ரயில் மார்க்கத்தின் தெற்கு களுத்துறை முதல் அழுத்கம வரையிலான பகுதியை நேற்றைய தினம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் கருத்து தெரிவித்தார்.

புனரமைப்பு செய்யப்பட்ட கரையோர ரயில் மார்க்கத்தின் தெற்கு களுத்துறை முதல் அழுத்கம வரையான பகுதியை இந்திய பாராளுமன்ற உறப்பினர்களால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே. காந்தா உள்ளி்ட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment