Wednesday, April 11, 2012

இந்தியாவுக்கு செவி கொடுங்கள் - சந்திரிகா!

Wednesday,April,11,2012
இலங்கை::தற்போதைய சூழ்நிலையில், இந்தியா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

சி.என்.என்.ஐ.பி.என் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்ல வேண்டிய பாதையை காண்பித்து, இந்தியா இலங்கை அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு, இந்தியா ஆதரவளித்மை குறித்து அவர் அதிர்சி வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.

எனினும் தற்போது இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்பட்டுள்ளது எனின், கடந்த 3 வருடங்களில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை போக்கிக் கொள்ளவும், மீளமைப்புதொடர்பிலும் போதுமான அளவில் செயற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்ட்டது.

இதற்கு பதில் வழங்கிய சந்திரிகா பண்டாரநாயக்க, கடந்த மூன்று வருடங்களில் மீள்கட்டுமான மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யுத்தம் ஒன்றை வெற்றி கொண்டதனால், சமாதானத்தை கொண்டு வந்து விட முடியாது எனவும், நிலையான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment