Wednesday, April 11, 2012

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.பி.க்கள் சபாநாயகரால் பாராட்டுத் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பு!

Wednesday,April,11,2012
இலங்கை::பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை பாராட்டும் நிகழ்வொன்று நேற்று (10) காலை சபாநாயகரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது சேவையினைப் பாராட்டும் வகையில் இவ்வாறானதொரு பாராட்டு நிகழ்வை ஏற்பாடு செய்ததாக இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

1956-77 காலப்பகுதியில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தயா ரீ பெஸ்குவெல், டீ.ஆர்.ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சித் அத்தபத்து, ஆனந்த குலரத்ன ஆகியோர் அடங்கலாக முன்னாள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 150 இற்கும் மேற் பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தந்ததையிட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் தமது மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அவர்கள் அங்கு வருகை தந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று நட்புரீதியாக கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்றத் தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தச நாயக்க உட்பட பாராளுமன்ற ஊழியர் களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment