Saturday, April 21, 2012

நாட்டில் இயங்கி வந்த சில அடிப்படை மதவாதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Saturday, April, 21, 2012
இலங்கை::நாட்டில் இயங்கி வந்த சில அடிப்படை மதவாதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதான மதங்களின் சகவாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்ட மதவாதிகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த அடிப்படை மதவாதிகள் அண்மையில் பௌத்த சமய விவகார அமைச்சரும், பிரதமருமான டி.எம். ஜயரட்னவை சந்தித்து பேச்சு;வார்த்தை நடத்தியுள்ளனர். பிரதான கத்தோலிக்க மதத்திற்கு எதிராக அவர்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். குறிப்பாக அதி வணக்கத்திற்குரிய கார்தினால் மெல்கம் ரஞ்சித் பிழையான வழிகாட்டல்களை வழங்குவதாக குறித்த அடிப்படை மதவாதிகள் பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு நாட்டின் பிரதான மதமொன்றுக்கு எதிராக முறைப்பாடு செய்ய்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அடிப்படை மதவாத கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கோரிக்கை விடுத்த அடிப்படை மதவாதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment