
இலங்கை::தம்பதியினரிடமிருந்து பலவந்தமாக 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற திடலுக்கருகில் கார் ஒன்றுக்குள் இருந்த தம்பதியினரிடமிருந்து குறித்த கான்ஸ்ரபில்கள் பணத்தை பலவந்தமாக பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிரிஹாணா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்ரபில்கள், ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு கான்ஸ்ரபில் ஆகியோருக்கு எதிராக தம்பதியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment