Tuesday, April, 17, 2012இலங்கை::இந்திய பிரதிநிதிகளுடனான சந்திப்பு சாதகமான பலன்களை கொடுக்கும் என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்றக் குழுவினரை இன்றைய தினம் சந்திக்க எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
விஜயம் செய்துள்ள இந்திய பிரதிநிதிகள் நிலைமைகளை சரியான முறையில் ஆராய்வார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பாராளுமன்றக்குழுவினர் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற போதிலும், தமிழ் சமூகத்திற்கு சாதகமான வகையில் இந்த விஜயம் அமைய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என கட்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment