Thursday, April, 26, 2012இலங்கை::ஸ்ரீஜயவர்தனபுர பகுதியில் போதைப் பொருள் விநியோகம் நிலையமொன்றை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த போதைப் பொருள் விநியோக நிலையம் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மிக முக்கியமான போதைப் பொருள் விநியோக நிலையங்களில் ஒன்றாக இந்த நிலையம் கருதப்படுகின்றது.
பிளாஸா குடியிருப்புத் திட்டத்தின் பத்தாம் மாடியில் இந்த விநியோகம் நிலையம் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் வெலே சுதா என்னும் நபரே இந்த வர்த்தக நடவடிக்கைகளை நடாத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
500 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள், வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் கார், 7680000 பணம் ஆகியனவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
No comments:
Post a Comment