Sunday, April 15, 2012சென்னை::இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் கொழும்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் இவர்களின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இலங்கைக்கு செல்லவிருக்கும் இந்திய நாடாளுமன்றக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா. ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேசவுள்ளது.
இந்த நாடாளுமன்றக் குழுவின் இலங்கை வருகை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏப்ரல் 16, 2012இல் இந்தியாவிலிருந்து தூதுக்குழு புறப்படுகிறது.
ஏப்ரல் 17,2012 1. இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் உரையாடல். 2. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உடனான சந்திப்பு 3. நாடாளுமன்ற விஜயம் சபாநாயகருடன் சந்திப்பு. நாடாளுமன்ற அங்கத்தவர்களுடன் சந்திப்பு 4. மூத்த அமைச்சர்களுடன் போசனம் 5. தமிழ்த் தேசியக் கூட்டணியினருடன் சந்திப்பு 6. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சந்திப்பு 7. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகருடன் இராப்போசனம். ஏப்ரல் 18, 2012 1. வட மாகாண விஜயம். 2. மதவாச்சிக்கான விஜயம் வடக்கு ரயில்வே திட்டத்தைப் பார்வையிடல். 3. முல்லைத்தீவு 1) மாவட்ட மருத்துவமனைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்குதல். 2) வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கல். 3) திருத்தப்பட்ட பாடசாலைகளைக் கையளித்தல். 4) உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கு சைக்கிள்கள் வழங்குதல். 5) உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல்.
பாதுகாப்பு கமாண்டரால் விளக்கமளித்தல். பின்பு மதிய போசனம். யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரோடும் சிவில் சமூகத்தோடும் பரஸ்பர உரையாடல். இந்திய உதவி தூதுவருடன் இராப்போசனம்.
ஏப்ரல் 19, 2012 1. வடமாகாண ஆளுனருடன் சந்திப்பு. 2. மாகாண அதிகாரிகளுடன் சந்திப்பு. 3. காங்கேசன்துறை துறைமுக விஜயம். 4. கொழும்புக்கு திரும்புதல். 1. தென் மாகாணம் களுத்துறைக்கான விஜயம் 2. தெற்கு மாகாண ரயில்வே திட்ட புனர்நிர்மாண வேலைகள் கையளிக்கப்படல். 3. தென் மாகாண ஆளுனருடன் தேநீர் விருந்து. 4. கொழும்புக்கு திரும்புதல். 5. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இராப்போசனம். ஏப்ரல் 20, 2012 கிழக்கு மாகாண மட்டக்களப்புக்கு விஜயம் 1. தொழிற் பயிற்சி கல்லூரி கையளிக்கப்படல். 2. சீவா திட்டத்திற்கான விஜயம் 3. உள்ளூர் மக்களுடன் சந்திப்பு. கிழக்கு மாகாண முதலமைச்சருடன் போசனம்.
மத்திய மாகாணம் டிக்கோயாவுக்கு விஜயம். 1. வைத்தியசாலைத் திட்டத்திற்கான விஜயம் 2. ஹற்றன் டிக்கோயா மக்களுடன் கலந்துரையாடல். கொழும்பு திரும்புதல் ஏப்ரல் 21, சனிக்கிழமை 1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு. காலை உணவு 2. ஊடகவியலாளருடன் கலந்துரையாடல்.
14.30 மணிக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்படல்.
No comments:
Post a Comment