Wednesday, April 25, 2012

இலங்கை-தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து!

Wednesday,April,25,2012
இலங்கை::இலங்கை - கொரிய நாடுகளின் நிதியமைச் சுக்களுக்கிடையில் பொருளாதார ஒத்து ழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட் டுள்ளன. இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலும் இடம் பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இந்த மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளினதும் தலைவர்கள் முன்னிலையில் மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பேர்டினண்டும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு, தென்கொரியக் குடியரசின் பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுக்களுக்குமிடையில் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் தென்கொரிய பொது நிர்வாக, பாதுகாப்பு அமைச்சர் மெயின்க் ஹைம்கிம்மும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையின் நிதி, திட்டமிடல் அமைச்சும் தென்கொரிய நிதி மற்றும் வழிகாட்டல் அமைச்சுக்குமிடையில் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ் வொப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதியின் செலயாளர் லலித் வீரதுங்கவும் தென்கொரிய நிதி பிரதி அமைச்சர் சின் ஜாய் யுங்கும் இதில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கொரிய அபிவிருத்தி நிதியத்தின் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நான்கு வருடத்துக்கு ஒருமுறை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 2009 ம் வருடத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டங்களை நிறைவு செய்வதற்கு வாய்ப்புக்கிட்டியுள்ளது.

இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சும் தென்கொரிய அபிவிருத்தி அறிவுத்திறன் அமைச்சுக்குமிடையில் மின்சக்தி ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செலயாளர் எம். எம். சி. பேர்டினண்டும் தென்கொரியாவின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் யூன் சேங் சிக் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர். ஒப்பந்தங்களுக்கு முன்னதாக இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இதில் தென்கொரிய ஜனாதிபதி கூறியதாவது;

பயங்கரவாதத்தை தோற்கடித்தபின் இலங்கையில் ஸ்திரமானதொரு பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாட்டையும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கு குறித்தும் தாம் மகிழ்ச்சியுறுவதாக தென்கொரிய ஜனாதிபதி லீ மயூம் பக் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டின் ஜனாதிபதி லீ மயூம் பக்கிற்குமிடையில் நேற்றைய தினம் கொரிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை யொன்று நடைபெற்றது. இதன் போதே கொரிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரிய சோல் நகரத்திலுள்ள அந்நாட்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு கொரிய ஜனாதிபதி தம்பதியினரால் அமோக வரவேற்பளிக்கப் பட்டது.

இங்கு இரு நாட்டுத் தலைவர்களினதும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளினதும் உயர் மட்டத் தூதுக்குழுவினருக்கிடையில் மற்றுமொரு பேச்சுவார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கொரியாவில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையரை அனுப்பியமை தொடர்பில் இதன் போது தென்கொரிய ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். தற்போது 20,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளதைத் குறிப்பிட்ட கொரிய ஜனாதிபதி, இம்முறை இலங்கை ஜனாதிபதியின் கொரிய விஜயமானது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கும் கெளரவமாக கொரிய தொழில் வாய்ப்புக்கான கோட்டாவை மேலும் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக கொரிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்காக தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது இரு நாடுகளுக்கு மிடையில் வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு மற்றும் உள்ளக தனிப்பட்ட உறவுகளை மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர். இரு நாடுகளினதும் பாராளுமன்ற உறவுகளைப் பலப்படுத்த வேண்டியது சம்பந்தமாக கொரிய ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

இலங்கை அன்பளிப்புச் செய்துள்ள யானைக் குட்டிகளுக்காக நன்றி தெரிவித்த கொரிய ஜனாதிபதி அதனைப் பார்வையிடுவதில் கொரிய மக்கள் காட்டும் ஆர்வத்தையும் சுட்டிக்காட்டினார்.

கொரியாவில் வாழும் 30 வீதமான பெளத்த மக்கள் இலங்கையுடன் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய விமான சேவை யொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி இங்கு ஆலோசனையை முன்வைத்தார். அதேபோன்று இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கொரியா மூலம் கிடைக்கும் ஆதரவுகளுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன் இலங்கையில் தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப்

ஜி>கடந்த வருடத்தில் இலங்கையானது தென்கொரிய நாட்டுக்காக ஏற்றுமதி வருமானமாக 46 மில்லியன் டொலரைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப பூங்காவிற்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதுடன் மேலும் கொரிய மொழி ஆசிரியர்களைப் பெற்றுக் கொடுக்குமாறும் தெரிவித்தார். இதற்கு இச் சந்திப்பின் போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவர் கொரியாவுக்கு 16 வருடத்திற்குப் பின்னர் விஜயம் செய்துள்ளமையானது இரு நாடுகளினதும் பல்துறை மேம்பாட்டிற்கு இது வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...

இதேவேளை இலங்கை வலுவான முதலீட்டுக்கான ஒரு தளமாக திகழ்கின்றது என இதன்போது மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

கொரியாவின் முன்னணி வர்த்தகர்கள் சிலரை சந்தித்து நேற்று முற்பகல் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் இலங்கை தயாராக இருக்கின்றது என்று, பெரும்பாலான முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலீ்ட்டுக்கான தீர்மானங்களின் போது இலங்கை முதலீட்டு சபை திட்டங்களை தெரிவுசெய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதுடன், அந்த சந்தர்ப்பங்களின் ஊடாக பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு தென்கொரிய வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment