Saturday, April 14, 2012

உணவுகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை!

Saturday, April, 14, 2012
இலங்கை::நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதாரமாக உணவுகள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக விசேட அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பீ.ஜி. குமாரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதே எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இம்முறையும் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத் தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா நகர சபை மற்றும் சுகாதார பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு போதுமானளவு அதிகாரிகள் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அதற்காக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகாமையினால், இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உணவு பண்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கும், அதிகமான விலையிலும் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அது தொடர்பான முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்க முடியும் என நுவரெலிய மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment