Thursday, April 26, 2012

லண்டன் சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Thursday, April, 26, 2012
ஜக்கிய இராச்சியத்தின் லண்டன் கிங்ஸ்பரி (Kingsbury) ஶ்ரீசத்தாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மீது நேற்று முன்தினம் பெற்றோல் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பௌத்த விகாரையின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும், விகாரையின் சுவர் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் எவரும் பாதிக்கப்டவில்லை எனவும் தெரியவருகின்றது.

விகாரைக்கு அருகிலுள்ள வாகனத் தரப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலரே தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை மேற்கொண்டவர்கள் மற்றம் அதற்கான காரணங்கள் எதையும் அறிய முடியவில்லை என விகாராதிபதி கலயாயே பியதிஸ்ஸ தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment