Monday, April 23, 2012இலங்கை::வெளிநாட்டு இராஜதந்திரிகளும் புலம்பெயர் தமிழர்களும் கூறுவதைப்போல யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சி இல்லையென்று மறுத்துள்ள இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சிவில் நிர்வாகத்திற்கு இராணுவத்தினர் உதவி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்யாழ்.சிவில் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து 10 ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். ஆனால் தற்போது 15 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சி நிலவவில்லை மாறாக இராணுவம் பொது மக்களுக்கு சமூகசேவையையே செய்து வருகின்றது.யாழ்ப்பாணத்தை இராணுவ மயமாக்கும் திட்டம் எதுவும் எம்மிடம் இல்லை. இராணுவம் சிவில் நிர்வாக்த்திற்கு தடையென்கிற கூற்றை முற்றாக மறுக்கின்றேன்.
இராணுவத்தை மக்கள் ஒருபோதும் சமூகவிரோத சக்தியாக பார்க்கவேண்டாம். நாம் கடந்த காலத்தில் பொது மக்களுக்கு செய்த உதவிகளைப்போலவே தொடர்ந்தும் சமூக நலஉதவிகளை மேற்கொள்ளவோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment