Sunday, April, 08, 2012இலங்கை::திருகோணமலை, உப்புவெளி, அன்புவெளிபுரம் பகுதியில் இளைஞரொருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி காலையில் வேனொன்றில் வருகைத்தந்த குழுவினரால் குறித்த நபர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ரவீந்திரன் ராமசாமி என்ற 28 வயதான குறித்த நபர் திருகோணமலை தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வத்தளை, ஹுனுப்பிட்டிய ஆனந்த மாவத்தையைச் சேர்ந்த வர்த்தகரொருவர் இன்று நண்பகல் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
வாகன விற்பனையில் ஈடுபடும் 52 வயதான ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நண்பகல் 12.30 அளவில் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சுமார் எட்டுப் பேர் குறித்த நபரை கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment