Sunday, April 8, 2012

ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் : ஒபாமா திடீர் அறிவிப்பு!

Sunday, April, 08, 2012
வாஷிங்டன்::அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை நிரூபித்தால், மக்கள் நலத்திட்டங்களுக்கான அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்ÕÕ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதை காரணம் காட்டி ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டின. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், Ôஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்Õ என்று பதிலடி கொடுத்தனர். எனினும், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 'அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்ÕÕ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலை துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனிடம் கூறி, அதை ஈரான் தலைவர்களிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒபாமாவின் தகவலை அலி கமேனியிடம் தயிப் கடந்த வாரம் தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment