Monday, April 16, 2012இலங்கை::மனித உரிமை நிலைமைகள் குறித்து, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமை தொடர்பில் கால அடிப்படையிலான மீளாய்வாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கமும் சுயாதீன நிறுவனங்களும் கூட்டாக இணைந்து காத்திரமான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அது வெற்றிகரமாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 20ம் அமர்வுகளில் கால அடிப்படையிலான சர்வதேச மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment