Monday, April 02, 2012நெல்லை::பாளை அண்ணாநகர் அருகேயுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் பாப்புலர் மாடசாமி. திமுக முன்னாள் பகுதி செயலாளரான இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பொன்னம்மாள்(52), மகன்கள் சுந்தர்(37), வள்ளிநாயகம்(34), கணேசன்(33), முத்தையா(32), வெங்கடேஷ்(29). இந்நிலையில் பாளை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினரின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவர்களை பார்ப்பதற்காக சுந்தர், இவரது தம்பி வள்ளிநாயகம், உறவினர் பாலு ஆகியோர் நேற்று முன்தினம் சென்றனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்த ஐயப்பன்(32) என்பவருடன் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் ஐயப்பன் தரப்பினருக்கும் சுந்தர் தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலையில் பாப்புலர் மாடசாமி வீட்டு முன்பு சந்தேகப்படும்படியாக 20 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி கொண்டனர். அப்போது அந்த கும்பல் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்து வெடிகுண்டுகளை அங்கிருந்த வாகனங்கள் மற்றும் வீட்டின் மாடி மீதும் வீசினர். இதில் 4 கார்கள், ஒரு லோடு ஆட்டோ, மூன்று பைக்குகள் சேதமாயின. தகவலறிந்து அங்கு போலீசார் வந்தனர். இதனை கண்டவுடன் அந்த கும்பல் கார்களில் தப்பியோடியது.
இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுந்தருக்கும் ஐயப்பனுக்கும் ஏற்பட்ட தகராறில் பழிக்குப்பழியாக அவரது வீட்டில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக வல்லநாட்டை சேர்ந்த ஐயப்பன், மாடசாமி ஆகியோரை இன்று பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment