Monday, April 16, 2012இலங்கை::பாலஸ்தீன் ஜனாதிபதி மொஹமட் அபாஸ் நேற்று இரவு 10.45 அளவில் இலங்கையை வந்தடைந்தார்.
இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் இங்கு வந்துள்ளார்.
அவருடன் மேலும் 7 தூதுவர்களும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது...
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும், பல ஆண்டுகளாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்துக்குரிய பகுதிகளை, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக, அப்பாஸ் அரசு, சர்வதேச அளவில் கூறிவருகிறது. இது தொடர்பாக, உலக நாடுகளின் ஆதரவையும், அது கோரி வருகிறது. இது குறித்து இலங்கையுடன் பேச, அப்பாஸ் இரண்டு நாள் பயணமாக, நேற்று கொழும்பு வந்தார்.இலங்கை அதிபர் ராஜபக்சேவை, இன்று அவர் சந்தித்து பேச உள்ளார். இலங்கையுடன் இரண்டு ஒப்பந்தங்களிலும், அவர் கையெழுத்திட உள்ளார்.
No comments:
Post a Comment