Tuesday, April, 03, 2012இலங்கை::புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.
புலி உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் ஊடுறுவியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாக வெளியான செய்திகள் வெறும் ஊகங்களே என இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியதாக மக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் கிடைக்கவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment