Tuesday, April 3, 2012

தமிழகத்தில் எல்.டி.டி.இ.,பயிற்சி மையங்கள்: இந்திய தூதர் மறுப்பு!

Tuesday, April, 03, 2012
இலங்கை::தமிழகத்தின் மூன்று இடங்களில், விடுதலைப் புலிகளின் பயிற்சி மையங்கள் ரகசியமாகச் செயல்படுவதாக வந்த செய்தியை, இந்திய தூதர் மறுத்துள்ளார்.

இலங்கையில், ராணுவத்துடனான சண்டை முடிந்த பிறகு, தப்பித்துச் சென்ற, 150 புலிகள், தமிழகத்தின் மூன்று இடங்களில், ரகசியமாக பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நாட்டை நிலை குலையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈழ ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் கொலையில், சம்பந்தப்பட்ட புலிகள் மூன்று பேர் இதை தெரிவித்துள்ளதாகவும், "தி ஐலண்ட்' பத்திரிகையில் செய்தி வெளியானது.இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில், இந்த விஷயம் தெரிய வந்ததாக, பத்திரிகை வெளியிட்டுள்ள இச்செய்தி அடிப்படையில்லாதது. இது தொடர்பாக, இந்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை' என, கொழும்பு நகரில் உள்ள இந்திய ஐகமிஷனர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment